2026 மே 11, திங்கட்கிழமை

dd

யட்டியாந்தோட்டை விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2026 மே 11 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கபுமுல்ல பகுதியில் இவ்விபத்து 2026.05.10 அன்று காலை, நிகழ்ந்துள்ளது. கரவனெல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் ஓட்டுநரும், பின் இருக்கையில் பயணித்த 14 வயது சிறுவனும் பலத்த காயமடைந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி முச்சக்கரவண்டி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யட்டியாந்தோட்டை, பரூஸ்செல்லைப் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .