Editorial / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விமர்சனத்துக்குள்ளான குடியேற்றக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கியஸ்டன் நீல்சன், தனது பதவியிலிருந்து 16 மாதங்களில் நேற்று முன்தினம் இராஜினாமா செய்துள்ளார்.
மெக்ஸிக்கோவுடனான ஐக்கிய அமெரிக்க எல்லையில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பொன்றுக்கு மத்தியிலேயே கியஸ்டன் நீல்சன் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், கியஸ்டன் நீல்சனின் இராஜினாமாவை ஜனாதிபதி ட்ரம்ப் கோரியதாகவும், அவர் அளித்ததாகவும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய சுங்கம், எல்லைப் பாதுகாப்பு ஆணையாளர் கெவின் மக்அலீனன், உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களத்தில் நடப்பு செயலாளராவார் என டுவீட்டொன்றில் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை வரை பதவியில் இருப்பேன் என கியஸ்டன் நீல்சன் நேற்று முன்தினமிரவு டுவீட்டொன்றில் கூறியுள்ளார்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago