2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இரு ஆண் குறிகளோடு பிறந்த குழந்தை; ஆனால் அந்த உறுப்பு இல்லை

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரண்டு ஆண்குறிகளுடன் குழந்தையொன்று பிறந்துள்ளமை  பாகிஸ்தானில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இக்குழந்தையின்  ஒரு ஆண்குறி மற்றொன்றை விட ஒரு சென்டிமீற்றர் நீளமாக இருப்பதாகவும், இரண்டும் சிறுநீர் கழிக்கக்கூடியதாகவும் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இக் குழந்தைக்கு  ஆசன வாய் இல்லை எனக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக கொலோனோஸ்கோபி மூலம் துளை ஒன்றை உருவாக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டிஃபாலியா ‘எனப்படும் இவ் அரிய மருத்துவ நிலையானது ஆறு மில்லியன் குழந்தைகளில் ஒருவருக்கே  ஏற்படும் எனவும் மருத்துவ வரலாற்றில் இதுவரை 100 கேஸ்கள்  மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .