Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட், “காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும். காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.
அமெரிக்கா கேட்கும் மற்றும் சொல்லும் அனைத்தையும் நான் கருத்தில் கொள்கிறேன். மேலும் அமெரிக்கா செய்து கொண்டிருப்பதை அனைத்து கேபினட் மந்திரிகளுடன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். அமெரிக்கா எங்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் காண்போம்.
நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன். அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம்.
கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்துள்ளனர். இது பயங்கரவாத குழுவிற்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது. யாரெல்லாம் சரண் அடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும். ஹமாஸின் சீனியர் கமாண்டர்கள், பயங்கரவாதிகள் ஆகியோர் நிலைமை சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும். 3-வது வாய்ப்பு இல்லை.” என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
27 minute ago
32 minute ago