Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில்இ இஸ்ரேலியப் படைகளின் மீதுஇ பலஸ்தீனர்கள் மூவர் காரொன்றை நேற்று (04) மோதியதில்இ அதிகாரியொருவர் மோசமாகக் காயமடைந்ததைத் தொடர்ந்துஇ தாக்குதலாளிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்இ இரண்டு பேர் முரட்டுத்தனமாகக் கொலை செய்யப்பட்டதாக பலஸ்தீன வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ள நிலையில்இ குறித்த சம்பவத்தை காரால் மோதும் சம்பவமொன்றாக வர்ணித்த இஸ்ரேலிய இராணுவம்இ வாகனத்திலிருந்த மூன்றாவது பலஸ்தீனர்இ படைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து காயமடைந்ததாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளைஇ பலஸ்தீன நகரான றமல்லாவுக்கு வடமேற்காக 10 கிலோமீற்றர் தூரத்தில்இ வீதியோரமாக தங்களது வாகனத்தை இரவு நிறுத்தியதைத் தொடர்ந்தே படைவீரர்கள் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்இ பலஸ்தீனர்களுக்கான ஜெருசசேலத்திலுள்ள ஐக்கிய அமெரிக்க துணைத் தூதரகம்இ இஸ்ரேலுக்கான ஐக்கிய அமெரிக்காவின் புதிய தூதரகத்துக்குள் நேற்று உள்ளடக்கப்படும் என ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜெருசசேலத்தில் தனித்ததொரு தூதரகத்தை உருவாக்கும் முடிவுஇ ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவால் கடந்தாண்டு ஒக்டோபரில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago