2025 மே 14, புதன்கிழமை

இஸ்ரேலில் யுத்தம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 07 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலின் மீது பாரிய தாக்குதலொன்றை பலஸ்தீனக் குழுவான ஹமாஸ் இன்று (07) ஆரம்பித்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த அதிரடித் தாக்குதலில் இஸ்ரேலுக்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்ததுடன், காஸாவிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட றொக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.

இந்நிலையில் சில இஸ்ரேல் நகரங்கள் மற்றும் காஸாவுக்கு அருகிலுள்ள இராணுவத் தளங்களில் ஹமாஸ் போராளிகளுடன் மோதலை இஸ்ரேலின் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை தாக்குதல்களில் தாமும் இணைந்துள்ளதாகவும், சில இஸ்ரேலியப் படைவீரர்களை பணயக்கைதிகளாகப் பிடித்துள்ளதாக இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, காஸாவுக்குள் இஸ்ரேலிய பணயக்கைதிகள் கொண்டு செல்லப்படும் காணொளியை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .