Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ளகாசா மீண்டும் கட்டி எழுப்பப்படும். அந்த பகுதியில் இருந்து தீவிரவாதம் அகற்றப்படும். ஹமாஸ் குழுவின் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்ட பிறகு காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும்.
ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை கைவிட வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காசாவில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளில் குடியேறலாம். காசாவை நிர்வகிக்க உள்ளூர் தலைவர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்படும். இந்த குழுவில் ஹமாஸ் தலைவர்களுக்கு இடம் கிடையாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச குழுவின் வழிகாட்டுதலின்படி புதிய குழு காசாவை நிர்வகிக்கும். காசாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.சர்வதேச முதலீடு அதிகரிக்கப்படும். வேலைவாய்ப்புகள் பெருக்கப்படும். ஐஎஸ்எப் என்ற சர்வதேச படை காசாவில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் என்பன உள்ளிட்ட திட்டத்தை ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே நேற்று முன்தினம் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இஸ்ரேல் அரசின் மூத்த அமைச்சர் ரோன் டெர்மர் தலைமையிலான குழு, ஹமாஸ் மூத்த தலைவர் காலில் அல் ஹையா தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே 2-வது நாளாக நேற்றும் பேச்சுவார்த்தை நீடித்தது. அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் மற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். அப்போது முக்கிய உடன்பாடு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறும்போது, “இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுதலை செய்து, உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைத்துவிட்டால் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்" என்று தெரிவித்தன. (a)
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago