2026 மார்ச் 04, புதன்கிழமை

ஈரான் மீதான தாக்குதலுக்கு இது தானா காரணம்?

S.Renuka   / 2026 மார்ச் 04 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீதான தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார். 

அணுசக்தி திட்டம் மற்றும் போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது வான்வழி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

கடந்த சனிக்கிழமை (28) காலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய இந்த கூட்டுத்தாக்குதல்களில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டுள்ளார். இதனால் ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க  இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது.

அதாவது, ஈரான் அணுசக்தி நாடாகிவிட்டால், அது கடும் ஆபத்தாகிவிடும் என்று அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அடுத்து, இந்த அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்த நிலையில், ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனை தொடர்ந்து, அமெரிக்கா- ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதுவும் சுமுகமாக முடியாத நிலையில், ஈரான் மீது கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. 

இதனால் ஆத்திரமடைந்த ஈரான்,  இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, வளைகுடா பகுதகளில் உள்ள எண்ணெய் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவகிறது. இதனால் உலகமெங்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார். 

இது தொடர்பாக கூறியதாவது, ஈரான் புதிய தளங்கள் மற்றும் புதிய இடங்கள், பூமிக்கடியில் பதுங்கு குழி கட்ட தொடங்கியுள்ளது. 

இன்னும் சில மாதங்களுக்குள் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம், அணுஆயுத திட்டம் ஆகியவற்றை உருவாக்கிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. 

ஆகையால்தான் தற்போது நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரில் அணுஆயுத தளங்கள் மற்றும் அவர்களுடைய பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் மீது தாக்குதல் நடத்தினோம். ஆனாலும், அவர்கள் (ஈரான்) புதிய தளங்களை கட்ட தொடங்கினார்கள் என விளக்கமளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .