Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 04 , பி.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனில் போர் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து மோசமடைந்து வரும் தற்போதைய சூழ்நிலைக்கு இந்தியா ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், ஆயுத மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்கு தடையின்றி மனிதாபிமான அணுகல் தேவை என மீண்டும் வலியுறுத்தியது.
ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி ஐ.நா பாதுகாப்புச் சபையிலே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஐ.நா.வின் முன்முயற்சிகள் மற்றும் உலக உணவுத் திட்டம் போன்ற அதன் பிரதிநிதிகள் தொடர்ந்து முயற்சிகளை வலுப்படுத்தியுள்ளன என்றும் உக்ரைனுக்கு மனிதாபிமான அனுமதிப் போக்குவரத்துக்கு ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முடிவையும் நாங்கள் கருத்தில் எடுக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து சாதகமாக பதிலளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டார்.
உக்ரைனின் மோசமான மனிதாபிமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே 90 தொன் மனிதாபிமான பொருட்களை உக்ரைனுக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் இந்தியா அனுப்பியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த பொருட்களில் அகதிகளுக்கான மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .