2025 ஜூலை 14, திங்கட்கிழமை

உக்ரைனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

Freelancer   / 2023 மே 03 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் கொல்ல முயற்சிப்பதாக ரஷ்யா, புதன்கிழமை (03) குற்றம் சுமத்தியுள்ளது.

மாஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. 

இரண்டு உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை அதிகாலை கிரெம்ளினைத் தாக்க முயன்றதாகவும்,  அந்த திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா குற்றம் சாட்டுவது போல் ஆளில்லா விமான தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும்  உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்தும் ரஷ்ய திட்டம் என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக கிரெம்ளின் குற்றம் சாட்டிய போதிலும், தாக்குதல் பற்றிய எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .