Editorial / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொலம்பியாவிலிருந்து மனிதாபிமான உதவிப் பொருட்கள் வெனிசுவேலாவுக்குள் கொண்டுவரப்படலாம் எனக் கருதப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான பாலத்தை, வெனிசுவேலா இராணுவத்தினர் மூடியுள்ளனர். இதைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் அரசியல் குழப்ப நிலை மோசமடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இடைக்கால ஜனாதிபதியாகத் தன்னை அறிவித்துக் கொண்ட குவான் குவைடோ, நாட்டில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தி, ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கான சவாலை வழங்க முயலும் நிலையிலேயே, இராணுவம் இவ்வாறு செயற்பட்டுள்ளது.
இந்த உதவிப் பொருட்கள், குவைடோவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மதுரோவின் ஆதரவுத் தளத்தில், இராணுவத்தினரே பிரதானமாவர்களாகவும் முக்கியமானவர்களாகவும் காணப்படும் நிலையில், உதவிப் பொருட்களைத் தடுக்க வேண்டாமென, குவைடோ, ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், அதை மீறி இராணுவம் செயற்பட்டுள்ளமை, மதுரோவுக்கு விசுவாசமாகவே இராணுவம் இன்னும் காணப்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
மனிதாபிமான உதவிப் பொருட்களை நிராகரித்திருந்த மதுரோ, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்புக்காக இந்த உதவிகள் பயன்படுத்தப்படும் எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
குவைடோவுக்கு, ஏறத்தாழ 40 நாடுகள், தமது ஆதரவை ஏற்கெனவே வழங்கியுள்ளதோடு, “தேசத்தின் நிலை” உரையை இலங்கை நேரப்படி நேற்று (06) ஆற்றிய ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குவைடோவுக்கான தனது ஆதரவை மீளவும் வெளிப்படுத்தியிருந்தார்.
சர்வதேச நாடுகளின் ஆதரவு காணப்பட்டாலும், மதுரோவுக்கான எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்பார்க்கும் குவைடோ, ஏற்கெனவே பல ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார். அதனடிப்படையில் அடுத்த போராட்டம், எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025