Editorial / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவுக்குள் மனிதாபிமான உதவிகளைக் கொண்டு வரும் அதிக ஆபத்து நிறைந்த நடவடிக்கையொன்று நேற்று முன்தினம் வன்முறையாகியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவின் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன், உதவிகளைக் கொண்டு சென்ற ட்ரக்குகள் எரிக்கப்பட்ட நிலையிலேயே, வெனிசுவேலாவுக்குள் மனிதாபிமான உதவிகளைக் கொண்டு வரும் நடவடிக்கை வன்முறையானது.
பாதுகாப்புப் படைகளுடனான மோதல்களில், 14 வயதுச் சிறுவன் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன், பல்வேறு எல்லைக் கடவைகளில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உதவிகளைக் கொண்டுவர ஜனாதிபதி மதுரோவால் தடைவிதிக்கப்பட்டிருந்தபோதும், கொலம்பியா, பிரேஸில், கரீபியத் தீவான குராக்கோவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு, மருத்துவ உதவிகள் வெனிசுவேலாவுக்குள் செல்வதற்கான நேற்று முன்தினம் என்ற காலக்கடுவை, வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ விதித்திருந்தார்.
தன்னைத் தானே ஜனாதிபதியாக ஒரு மாதத்துக்கு முன்னர் அறிவித்துக் கொண்ட வெனிசுவேலா தேசிய சபையின் தலைவரான குவைடோவுக்கும் ஜனாதிபதி மதுரோவுக்கிடையேயான பிரதான முறுகலாக, பெரும்பாலாக ஐக்கிய அமெரிக்காவிடமிருந்தான குறித்த மனிதாபிமான உதவியே காணப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க பிராந்தியமான புவர்ட்டா றிக்கோவிலிருந்து உதவியைக் கொண்டு சென்றிருந்த படகொன்று, வெனிசுவேலா இராணுவத்திடமிருந்து, நேரடியாகத் தாக்கப்படுமெனக் கூறப்பட்டடதைத் தொடர்ந்து திரும்பியதாக புவர்டா றிக்கோவின் ஆளுநர் றிக்கார்டோ றொசெல்லோ தெரிவித்துள்ளார்.
6 hours ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
05 Nov 2025