Editorial / 2019 மார்ச் 20 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஸாம்பிக்கில் பலமான சூறாவளியொன்று, வெள்ளங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டலாம் என அந்நாட்டு ஜனாதிபதி பிலிப் நையுசி, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வே, மலாவியிலும் பாதிப்புகளை ஏற்படுத்திய இடாய் சூறாவளியால், மொஸாம்பிக்கில் உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84ஆகவே உள்ளபோதும், பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேலால் பறந்திருந்த ஜனாதிபதி பிலிப் நையுசி, கிராமங்கள் காணாமல் போயுள்ளதாகவும், தண்ணீரில் சடலங்கள் மிதப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிம்பாப்வேயில் இடாய் சூறாவளியால் 98 பேர் கொல்லப்பட்டதுடன், 200க்கு மேற்பட்டோரைக் காணவில்லை என அந்நாட்டு அரசாங்கம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ள நிலையில், கடந்த வாரத் தகவலின்படி கடும் மழை, வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆகக் காணப்படுகின்றது. மலாவியை இடாய் சூறாவளி தாக்கிய பின்னரான புதிய எண்ணிக்கை வெளியிடப்பட்டிருக்கவில்லை.
அந்தவகையில், மொஸாம்பிக்கியின் பெய்ரா நகரில் வெள்ளத்தால் சிக்கியுள்ளவர்களை மீட்பவர்களுக்காக, நெஞ்சளவிலான தண்ணீருக்குள் டிங்கிகளை மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்திருந்தனர்.
இதேவேளை, வீதிகள், பாலங்களை மீள் நிர்மாணிக்கவும், தண்ணீர், சுகாதார வசதிகள், மின்சாரத்தை வழங்குவதற்கு 18 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை சிம்பாப்வே திறைசேரி விடுவித்துள்ளது
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago