Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலைகுலைந்து போய் உள்ளனர்.
உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 4 லட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 லட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரேயொரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடங்கியுள்ளது.
இதையடுத்து, "உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காசாவுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago