2026 மே 11, திங்கட்கிழமை

dd

பிரதமர் மோடி வாழ்த்து; முதல்வர் விஜய் நன்றி

Freelancer   / 2026 மே 11 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்'' எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் விஜய், முதல்வராக நான் பொறுப்பேற்றதையொட்டி, தனது கனிவான வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே குறிக்கோளாகும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு, ஒன்றிய அரசின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .