Freelancer / 2026 மே 11 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது.
இது தொடர்பாக முதன்மைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கூடுகிறது. இன்றைய தினம் புதிதாக தேர்வு செய்யப்பட்டிருப்பவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்க இருக்கிறார்கள்.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சட்டப் பேரவை உறுப்பினராக பதவியேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் வநாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளிலும், தி.மு.க 59 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 5, பா.ம.க. 4, சி.பி.ஐ 2, சி.பி.எம் 2, வி.சி.க 2, ஐ.யு.எம்.எல். 2, பா.ஜ.க. 1, தே.மு.தி.க. 1 ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. (a)
45 minute ago
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
54 minute ago
3 hours ago