Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 29 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் பேசுவதாக பாகிஸ்தான் கூறிக்கொண்டாலும், பீஜிங்கின் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பெயர் போன சின்ஜியாங்கில் உள்ள சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாப்பதற்கான சீனாவின் முயற்சிகளை பாராட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அண்மையில் இடம்பெற்ற சின்ஜியாங் தீர்மானம் மீதான அறிக்கையின் போது, பாகிஸ்தான் தூதுவர் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.
சின்ஜியாங்கில் சமூக-பொருளாதார மேம்பாடு, நல்லிணக்கம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை முன்னேற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளை பாகிஸ்தான் பாராட்டுவதாகவும் ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒன்றியத்தின் 17 நாடுகளில் 12 நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், 4 நாடுகள் வாக்களிக்கவில்லை.
இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒன்றியத்தின் நாடான சோமாலியா மாத்திரமே சீனாவின் சின்ஜியாங்கில் மனித உரிமைகள் நிலைமை குறித்து விவாதம் நடத்தும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.
பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசும் அதே வேளை, சீனாவை ஆதரிக்கும் அதன் அறிக்கை வேறுபட்ட பிம்பத்தைக் காட்டுகிறது.
ஐநா மனித உரிமைகள் பொறிமுறையுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் பாதையை சீனா பின்பற்றி வருவதாகவும், சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் அடிப்படை மனித உரிமைகளை அனுபவிப்பதற்கான சூழலை பீஜிங் எவ்வாறு உருவாக்கி வருகிறது என்றும் பாக். தூதுவர் கூறினார்.
இதேவேளை, சீனாவின் ஜின்ஜியாங்கில் மனித உரிமைகள் நிலவரம் குறித்த விவாதம் நடத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
47 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 17 உறுப்பினர்கள் ஆதரவாகவும் சீனா உட்பட 19 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்த நிலையில், வரைவுத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
இதில், இந்தியா, பிரேசில், மெக்சிகோ மற்றும் உக்ரைன் உட்பட 11 நாடுகள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உய்குர் சிறுபான்மையினரிடையே உள்ள பயங்கரவாதிகளை தீவிரவாத எதிர்ப்பு உத்தியுடன் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக சீன அரசாங்கம் கூறியுள்ள போதும் அங்கு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago