Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 25 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவினால் விநியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இலங்கையின் வெளிவிவகார சேவை அதிகாரிகள் சங்கத்தின் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் வெளிவிவகார அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு செலுத்துவதற்காக பருப்பு, அரிசி மற்றும் பிற பொருட்களை விநியோகிக்கும் சீனாவின் முயற்சி கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.
பொருட்கள் அனைத்தும் சீன அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்ட போதும் சிசிபி வர்த்தக முத்திரை கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளில் மறைக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
வெளிவிகார அமைச்சின் ஊழியர்களுக்கு உலர் உணவுகளை விநியோகித்ததுதான் இலஞ்சத்தில் மிக மோசமானது என்று அந்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
உலகிலுள்ள எந்தத் தூதரகமும் வெளிவிவகார அமைச்சுக்கு இதுபோன்ற பங்களிப்பை வழங்காது என்றும் குறிப்பாக இலங்கை போன்ற ஒரு நாட்டில், பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ள அவர்களின் இலட்சியமான பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியுடன் நகர்வதற்கு சீனா அரசியல்வாதிகளுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கான சீன நன்கொடையானது, வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மற்றும் சீனத் தூதரகத்திடம் இருந்து உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பணத்தைப் பெற்ற சீன-இலங்கை நட்புறவுச் சங்கம் ஆகியோரால் வெளிப்படையாக அங்கிகரிக்கப்பட்டது.
இலங்கை வெளிவிவகாரச் சேவையின் அங்கத்தவர்கள் அத்தகைய நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது பொருத்தமானதல்ல என்று, வெளிவிவகாரச் செயலளார் கொலம்பகேயுடனான சந்திப்பில் இலங்கையின் வெளிநாட்டுச் சேவை அதிகாரிகள் சங்கத்தின் தூதுக்குழுவினர் அதற்குப் பதிலளித்தனர்.
இது, வெளிநாட்டுச் சேவையையும் வெளிவிவகார அமைச்சையும் இக்கட்டான சூழ்நிலையில் நிலைநிறுத்தும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம் எனவும் சங்கம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
சீனத் தூதரகம், இலங்கையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது இது முதல் முறையல்ல
என்றும் தனது திட்டங்களை வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக அரசாங்கத்துக்கு சீனா பணம் செலுத்துவதாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
07 Sep 2025
07 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
07 Sep 2025
07 Sep 2025