2025 மே 17, சனிக்கிழமை

ஊட்டச்சத்துப் பானத்திற்காக சொகுசு காரை உடைத்த யூ-டியூபர்

Ilango Bharathy   / 2023 மார்ச் 07 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊட்டச்சத்து பானமொன்றை  பிரபலபடுத்தும் நோக்கில், இலங்கை மதிப்பில் சுமார் 14.6 கோடி  ரூபாய் மதிப்பிலான ‘Lamborghini Urus‘ காரை ரஷ்யாவைச் சேர்ந்த யூ-டியுப்பர் ஒருவர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகேல் லிட்வின்  (Mikhail Litvin)  என்ற 23 வயதான இளைஞரே  ‘Lit Energy ‘ என்ற ஊட்டச்சத்து பானத்தைப்  பிரபலபடுத்த  குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அந்தவகையில் கிரேன் மூலம் குறித்  ஊட்டச்சத்து பானம் நிரப்பப்பட்ட மிகப்பெரிய கொள்கலனை மேலே தூக்கி, பின்னர் கார் மீது விழச்செய்து, அதனை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது நடவடிக்கைக்கு பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .