Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 மே 17 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் பணவீக்கத்தை எதிர் கொள்வதற்காக நிறுவனமொன்று தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்கத்தில் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ள சம்பவம் உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்த நிதி சேவைகள் நிறுவனமான டேலி மணி நிறுவனமே இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில் ”நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக விலைவாசி மற்றும் செலவுகள் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றன. எனவே காலம் காலமாக பணவீக்கத்தை எதிர்கொள்ளும் ஆயுதமாகத் தங்கம் பயன்படுத்தப்படுவதனால், தங்கத்தில் சம்பளம் கொடுப்பதுவே சிறந்த முடிவாக நாங்கள் கருதுகின்றோம். அத்துடன் இந்நிறுவனத்தில் சுமார் 20 ஊழியர்கள் மாத்திரமே வேலை செய்கின்றனர்.
அதனால் சோதனை அடிப்படையில் தங்கத்தில் சம்பளம் கொடுத்துப் பார்க்கலாம் என்றும் முடிவு செய்துள்ளோம். அந்தவகையில் விருப்பப்பட்ட ஊழியர்கள், இனி சம்பளத்திற்குப் பதிலாகத் தங்கத்தில் சம்பளம் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளோம் ” என்றார்.
இந்நிலையில் இவரது அறிவிப்பானது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .