2026 மே 14, வியாழக்கிழமை

dd

எட்டு மாத இடைவெளியில் 2 குழந்தைகள்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதல் குழந்தை பிறந்து எட்டு மாதங்களே ஆன நிலையில் அடுத்த குழந்தையைப் பெண்ணொருவர் பெற்றெடுத்த சம்பவம் பிரித்தானியாவில் ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த 27 வயதான லூஸி என்பவரே இவ்வாறு கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளதோடு எட்டு மாத இடைவெளியில் இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

அவரது முதல் குழந்தை பிறந்து 3 மாதங்களாக அவருக்கு மாதவிடாய் ஏற்படவில்லை எனவும், இது குறித்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்த்த போதே  அவர் 2 ஆவது முறை கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிர்ச்சியில் மூழ்கிய லூஸி, வேறு வழியின்றி  இரண்டாவது குறை பிரசவத்தில் பெற்று எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள நிலையில், குறித்த குழந்தைகளின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .