2026 மார்ச் 23, திங்கட்கிழமை

எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

Freelancer   / 2026 மார்ச் 23 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மார்ச் 1 ஆம் திகதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்​-15 இ ரக போர் விமானங்​களை குவைத்வான் பாது​காப்பு ஆயுதங்​கள் தவறு​தலாக சுட்டு வீழ்த்தின.

சில நாட்​களுக்கு முன்பு அமெரிக்க விமானப்​படை​யின் அதி நவீன எப்​-35 போர் விமானத்தை தாக்​கிய​தாக ஈரான் கூறியது. இந்த விமானம் அமெரிக்க விமானப்​படை தளத்​தில் அவசர​மாக தரையிறங்​கிய​தாக கூறப்​பட்​டது. இந்​நிலை​யில் ஹார்​முஸ் தீவு அருகே எதிரி நாட்​டின் எப்​-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய​தாக ஈரான் ஊடகம் ஒரு காணொளியை பதிவேற்​றம் செய்துள்​ளது.

ஈரானின் வான் பாது​காப்பு கருவி​கள் மூல​மாக இந்த விமானம் சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​தாக ஈரான் ஊடகம் தெரி​வித்​து, அதற்கு ஆதார​மாக காணொளி ஒன்​றை​யும் பதிவேற்​றம் செய்​துள்​ளது. ஆனால் இதை எந்த நாடும் உறுதி செய்​ய​வில்​லை. எப்​-15 ரக போர் விமானத்தை அமெரிக்கா தவிர சவூதி அரேபி​யா, இஸ்​ரேல் மற்​றும் கட்டார் ஆகிய நாடு​களும்​ வைத்​துள்​ளன என்​பது குறிப்பிடத்​தக்​கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .