Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேற்கு இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் உள்ள 2891 மீட்டர் (9,484 அடி) உச்சத்துடன் இருக்கும் மராபி மலையில் இருக்கும் எரிமலை வெடித்து 3000 மீட்டர் உயரம் வரை புகை மண்டலமாக காட்சியளித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மராபி மலையில் ட்ரெக்கிங் மேற்கொண்ட அதாவது மலை ஏறுபவர்கள் 26 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களில் 14 பேரை கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாடாங் தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த மலையில் மொத்தமாக 75 பேர் இருந்ததாகவும் அதில், 12 பேர் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும், 49 பேர் கீழே இறங்கிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago