Freelancer / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ்லாந்தில், எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
4 இலட்சம் பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் தற்போதும் உள்ளன.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரின் தெற்கே ரையாக்ஜென் தீபகற்பத்தில் அமைந்துள்ள எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, லாவா எரிமலை குழம்பு வெளியேறி அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக, அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Mar 2026