Editorial / 2019 ஜனவரி 28 , மு.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாகத் தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென, ஐக்கிய அமெரிக்காவும் தலிபான் ஆயுதக்குழுவும் தெரிவித்துள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள், இரு தரப்புகளுக்குமிடையில் இடம்பெற்ற நிலையிலேயே, இரு தரப்புகளும் இணைந்து, இத்தகவலை நேற்று முன்தினம் (26) வெளியிட்டன.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக, ஐ.அமெரிக்காவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஸல்மே காலிட்ஸாட், தலிபான் பிரதிநிதிகளுடன், கட்டாரில் வைத்து, 6 நாள்களாக இப்பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், முன்னைய பேச்சுவார்த்தைகளை விட இப்பேச்சுவார்த்தையில், கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இந்த முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, மேலும் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தலிபான் தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், பல விடயங்களில் இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, உறுதியான எந்தத் தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை.
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025