2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஐ.நா பணியாளர்களில் மூன்றிலொருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின்படி, ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள், ஒப்பந்தக்காரர்களில் மூன்றிலொரு பேர் கடந்த இரண்டாண்டுகளில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர்.

அறிக்கையின்படி, பாலியல் கதைகள் அல்லது புண்படுத்தும் நகைச்சுவைக்குள்ளாகியுள்ளதாக 21.7 சதவீதமானோர் தெரிவித்துள்ளதுடன், தங்களது தோற்றம், உடல், பாலியல் நடவடிக்கைகள் தொடர்பாக புண்படுத்தும் கருத்துகளை 14.2 சதவீதமானோர் பெற்றுள்ளதுடன், பாலியல் விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்றில் அவர்களை இழுப்பதற்காக 13 சதவீதமானோர் வரவேற்கப்படாத நிலையைக் கொண்டிருந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள், அதன் முகவரகங்களிடேயே டெலொய்ட்டே நிறுவனத்தால் கடந்தாண்டு நவம்பரில் நடாத்தப்பட்ட குறித்த இணைய ஆய்வு 30,364 பேரிடமே நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், குறித்த எண்ணிக்கையானது ஆய்வு நடத்த தகுதியானோரில் வெறும் 17 சதவீதமே ஆகும்.

இந்நிலையில், ஆய்வுக்கான பதிலளிப்பு குறைவு என பணியாளர்களுக்கான கடிதத்தில் வர்ணித்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக முழுமையாக திறந்த கலந்துரையாடலை தாங்கள் நடத்துவதற்கு நீண்ட காலமுள்ளதெனக் தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கையின்மை, நடவைக்கை எடுக்கப்படாதென்ற அச்சம், பொறுப்புக்கூறல் குறைவும் காணப்படுவதாகக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களைச் சிக்கலுக்குள்ளாக்கும் அல்லது புண்படுத்துமான பாலியல் ரீதியான உடல்மொழிகளுக்கு தாங்கள் உள்ளானதாக 10.9 சதவீதமானோர் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் அசெளகரியமாக உணரும் வகையில் 10.1 சதவீதமானோர் தொடப்பட்டுள்ளனர்.

பாலியல் துன்புறுத்தலை அனுபவித்தோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் அது அலுவலகச் சூழலிலேயே இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள நிலையில், பணி தொடர்பான சமூக நிகழ்வில் அது இடம்பெற்றதாக 17.1 சதவீதமானோர் தெரிவித்துள்ளார்.

இது தவிர, பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளும் மூன்று பேரில் இருவர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாலியல் துன்புறுத்தலை அனுபவித்த பின்னர் மூன்றிலொருவரே தாங்கள் நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X