Editorial / 2019 ஏப்ரல் 12 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்) இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை தாமதப்படுத்துவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரித்தானியாவைத் தவிர்ந்த ஏனைய 27 நாடுகளின் தலைவர்களும், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும் இணங்கியுள்ளனர்.
பெல்ஜியத் தலைநகர் ப்ரஸெல்ஸில் நேற்றுக் காலை வரை தொடர்ந்த ஆறு மணித்தியாலங்களுக்கு மேலான சந்திப்பொன்றிலேயே பிரதமர் தெரேசா மேக்கு ஆறு மாத பிரெக்சிற் தாமத்தை வழங்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இணங்கியிருந்த நிலையில், அது பிரதமர் தெரேசா மேயால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை இவ்வாண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை தாமதப்படுத்துமாறு பிரதமர் தெரேசா மே கோரயிருந்த நிலையில், இவ்வாண்டு முடிவு அல்லது அதற்குப் பிந்தையதான நீண்ட கால பிரெக்சிற் தாமதத்தையே விரும்பியிருந்ததாக ஐரோப்பிய ஒன்றி தகவல் மூலங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், நீண்ட பிரெக்சிற் தாமதத்தை முடக்கும் பொறுப்பைத் தான் எடுத்துக் கொண்டதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் இயங்குவதைப் பாதுகாப்பதற்காக குறுகிய பிரெக்சிற் தாமதத்துக்கு ஏனைய தலைவர்களை இணங்க வைத்தாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரெக்சிற் நீடிப்பானது நெகிழ்வுத் தன்மையாகக் காணப்படுகின்ற நிலையில், பிரெக்சிற் ஒப்பந்தமானது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டவுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகலாம் என ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், அடுத்த மாதம் 22ஆம் திகதியைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடித்தால், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பிரித்தானியா பங்குபற்ற வேண்டு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago