Ilango Bharathy / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
"உலக நாடுகள் ஒமிக்ரோன் தொற்றிடமிருந்து தப்பிக்கவே முடியாது'"என உலக சுகாதார ஸ்தாபனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தென்ஆபிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட “ஒமிக்ரோன்” தொற்றனது உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறன.

இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ”முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பூஸ்டர் தடுப்பூசியை மாத்திரமே நம்பி திட்டமிடப்பட்ட கொண்டாட்டங்களை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கிறதன. இதனால் ஒரு நாடும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது” என்றார்.
மேலும் அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் 40 சதவீத இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago