2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஒரு போத்தல் விஸ்கி 2.7 மில்லியன் டொலரா ?

Freelancer   / 2023 நவம்பர் 21 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ஸ்காட்ச் விஸ்கி" என பிரபலமடைந்துள்ள ஸ்கொட்லேண்ட் நாட்டின் விஸ்கி மதுபானம் உலகெங்கும் பலரால் விரும்பப்படுபவை. இவற்றின் தரத்திற்காகவும் சிறப்பான சுவைக்காகவும், மதுபான பிரியர்கள் ஸ்காட்ச் விஸ்கிக்களை என்ன விலை கொடுத்தாவது வாங்குவது வழக்கம்.

மிக அரிதான பொருட்களை விற்க விரும்புபவர்களுக்கும் அவற்றை வாங்க விரும்புபவர்களுக்கும் இடையே ஏல முறையில் வர்த்தகம் நடத்தும் உலக புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனமான சாத்பீ'ஸ் (Sotheby's) அமெரிக்காவின் நியூயோர்க் நகரை மையமாக கொண்டு உலகின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் லண்டன் கிளையில், சில தினங்களுக்கு முன், 1926 வருட மெக்ஆலன் ஆடமி சிங்கிள் மால்ட் விஸ்கி (Macallan Adami Single Malt Whiskey) மதுபானம் சுமார் $2.7 மில்லியன் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த விஸ்கி, இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மதுபான வகைகளில் முன்னர் கிடைத்த தொகையை விட அதிகமாக ஏலம் விடப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் இது போன்ற விஸ்கி, மொத்தம் 40 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை வெளிச்சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. இவற்றை தயாரித்த மெக்ஆலன் நிறுவனம் தங்களின் மிக முக்கிய வாடிக்கையாளர்களுக்கே இவற்றை விற்பனை செய்து வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X