2025 மே 17, சனிக்கிழமை

‘ஓரினச்சேர்க்கைத் திருமணம்‘ குறித்து புடின் சர்ச்சைக் கருத்து

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்த கருத்தானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய புடின்” மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்பு, கலாச்சார-வரலாற்று அடையாளத்தை அழிப்பதாகவும், குழந்தைகள் விவகாரத்தில் பல்வேறு வக்கிரங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் விமர்சித்தார்.

மேலும் குடும்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுபோல் பிரார்த்திக்கும் கடவுளுக்கு ஆண்பால், பெண்பால் பெயரின்றி பாலின-நடுநிலை பிரதிபெயர்களை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக பிரித்தானிய தேவாலயம் அறிவித்திருந்ததையும் புடின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில் இவர் தெரிவித்த கருத்துக்கள் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .