Editorial / 2026 மார்ச் 03 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டிருந்த மறைந்த கமேனியின் மனைவியும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் திங்கட்கிழமை (02) அன்று மாலை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல் காரணமாக முன்னதாக ஈரானின் ஆட்சியாளர் கமேனி மற்றும் அவரது உறவினர் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்தனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கமேனியின் மனைவியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல்களில் ஈரானில் 555 பேரும் இஸ்ரேலில் 10 பேரும் அமெரிக்க இராணுவத்தினர் ஐவரும் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .