2025 மே 17, சனிக்கிழமை

கருத்தடை மாத்திரைகளுக்குத் தடை விதிப்பு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில்  தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கடுமையானக்  கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விதமாக”  பெண்கள் ஆண்களின் துணையின்றி வெளியே செல்வதற்கும், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும்  பூங்காவுக்குச் செல்வதற்கும், உயர் கல்வி கற்பதற்கும், தொலைக்காட்சிகளில் தோன்றுவதற்கும் தலிப்பான் அரசு தடைவிதித்திருந்து.

அது மட்டுமில்லாது ஆடையகங்களில் உள்ள பெண் பொம்மைகளின் முகங்களையும் மறைக்குமாறு தலிபான்கள்  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது   ”ஆப்கானிஸ்தானில் கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது” என்ற சட்டத்தை விதித்துள்ளனர்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வராவிட்டாலும் வீடுகள் மற்றும் மருந்தகங்களுக்கு நேரடியாக சென்று கருத்தடை சாதனங்கள் வைத்திருக்கக் கூடாது என அவர்கள் எச்சரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இஸ்லாமிய மக்கள்  தொகையைக்  குறைப்பதற்கு மேற்கத்திய நாடுகள் செய்த சதித்திட்டமே  இக் கருத்தடை மருந்துகள் என்று தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில்  கருத்தடை மருந்துகளுக்கு தடை விதித்தால் பேறுகால இறப்புகள் அதிக அளவில் நேரிடும் என உலக நாடுகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .