2025 மே 17, சனிக்கிழமை

கர்ப்பிணிகளே உஷார்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 11 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரோனாத்  தொற்றினால் பாதிக்கப்பட்ட  இரு கர்பிணிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மூளையில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித்  தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு வழிப்பு ஏற்பட்டதும் உடல் வளர்ச்சி தாமதமானதும் அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதில் ஒரு குழந்தை பிறந்த 13 மாதங்களில் உயிரிழந்து விட்டது. உயிரிழந்த குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ததில் அதன் மூலையில் கொரோனா வைரஸ் தடயங்கள் கண்டறியப்பட்டது. அதன் காரணமாகவே குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

எனவே கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவர்கள் இடம் அது பற்றி தெரிவித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .