Editorial / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த தலைவர் கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் கிடைத்திருக்காவிட்டால், அவரது உடலை ஏந்தி, நாமே கடற்கரையில் சென்று வைக்க வேண்டும் என முடிவு செய்திருந்ததாக, தி.மு.க மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் (09), தென்காசியில் இடம்பெற்ற பிரசாரக்கூட்த்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பிரதமர் மோடி, மக்களிடம் சென்று வேஷம் போடுவதாகக் கூறிய அவர், மக்களிடம் சென்று பரிதாபத்தைத் தேட முயன்ற அவர், இரக்கத்தை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறினார்.
தலைவர் கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் கிடைத்த போது, என் காதில் தேன் பாய்ந்தது என்றும் ஆனால் சிலருக்கு தேள் பாய்ந்தது என்றும் கூறினார்.
நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வரவில்லை என்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால், எல்லாத் தோழர்களையும் ஒன்று சேர்த்து, நம் தலைவரின் உடலை நாமே ஏந்தி, அதே கடற்கரையில் கொண்டு போய் வைக்க வேண்டும் என்ற முடிவோடே தான் இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago