Editorial / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில் வசித்துவந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி, துருக்கியிலுள்ள சவூதி அரேபியத் துணைத் தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்டமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணை நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
இது தொடர்பான விசாரணைகளுக்காக, ஐ.நாவின் விசேட அறிக்கையாளரான அக்னெஸ் கல்லமார்ட், துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். எனினும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க, சவூதி அரேபியா மறுத்திருந்தது.
இந்நிலையில், துருக்கிக்குச் சென்றிருந்த அவர், அமைச்சர்களுடனும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர்களுடனும் சட்டமா அதிபருடனும் சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
இச்சந்திப்புகளின் போது, கஷோக்ஜி கொல்லப்பட்டபோது பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒலிப்பதிவைக் கேட்பதற்கு, கல்லமார்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், துணைத் தூதரகத்துக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஷோக்ஜியின் கொலையோடு, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்குத் தொடர்பு காணப்படுகிறதெனக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், கல்லமார்டின் அறிக்கையில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படும் என்பது இதுவரை தெரியாமலேயே காணப்படுகிறது.
35 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
9 hours ago
05 Nov 2025