Editorial / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியதாகவும், இந்திய ஜெட்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று (27) தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்குள், 1971ஆம் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் முதற்தடவையாக இந்தியப் போர்விமானங்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்திய மறுநாளே, மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மிரில், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜைஷ்-ஈ-மொஹமட் மேற்கொள்ளப்பட்ட கார்த் தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றில் குறைந்தது 40 இந்திய துணைப் பொலிஸார் இம்மாதம் 14ஆம் திகதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்த நிலையில், குறித்த குழுவின் பயிற்சித் தளத்தின் மீதான தாக்குதலென இந்தியா நேற்று முன்தினம் தாக்குதல் மேற்கொண்டமையைத் தொடர்ந்தே மோதலுக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரித்திருந்தன.
இந்நிலையில், தமது வான்பரப்புக்குள் இந்திய ஜெட்கள் நுழைந்தமையையடுத்து, இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மிரில் ஆறு விமானத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியதாகத் தெரிவித்த பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஹபூர் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள இந்தியா, இராணுவக் கட்டமைப்புகளை இலக்கு வைத்து பாகிஸ்தானே முதலில் தாக்குதல்களை தொடங்கியதாகக் கூறியுள்ளது.
இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மிரில் ஒரு வானூர்தி வீழ்ந்ததாகவும் இரண்டாவது பாகிஸ்தானின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மிரில் வீழ்ந்ததாகவும் விமானிகள் இருவர் கைப்பற்றப்பட்டதாக ஆசிஃப் கஹபூர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இராணுவ இலக்குகள் மீதான பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக, செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்த இந்திய வெளிநாட்டமைச்சின் பேச்சாளரொருவரான றவீஷ் குமார், பாகிஸ்தான் விமானமொன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும் அது பாகிஸ்தான் பிராந்தியத்தில் வீழ்ந்ததாகவும் தாங்கள் தங்களது விமானமொன்றை விமானியுடன் இழந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
அந்தவகையில், காஷ்மிரின் பிரதான விமானநிலையமான ஶ்ரீநகரையும் அயல் மாநிலங்களிலுள்ள மூன்று விமான நிலையங்களை மூட இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ள நிலையில், தமது வான்பரப்பை மூடியுள்ள பாகிஸ்தான், தமது நாட்டிலுள்ள வர்த்தக விமாங்களை நிறுத்தியுள்ளது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago