Editorial / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், வியட்நாமில் வைத்து, இம்மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் சந்திக்கவுள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப், இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
“தேசத்தின் நிலை” உரையின் போது, வெளிநாட்டு உறவுகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.
வடகொரியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில், இன்னும் ஏராளமான பணிகளை மேற்கொள்ளவுள்ளதெனத் தெரிவித்த அவர், எனினும், கடந்த 15 மாதங்களில் எவ்விதமான அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகள் இடம்பெறாததைச் சுட்டிக்காட்டினார்.
“ஜனாதிபதியாக நான் தெரிவுசெய்யப்பட்டிருக்கா -விட்டால், எனது கருத்தின்படி, இப்போது நாங்கள், வடகொரியாவுடன் மாபெரும் போரொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருப்போம்” என, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
வடகொரியாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள், அண்மைய தசாப்தங்களில் உறுதியான இருந்திருக்கவில்லை என்ற போதிலும், ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற 2017ஆம் ஆண்டிலேயே, அந்த உறவு மோசமடைந்து, போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர், கடந்தாண்டு முதல், அந்நிலைமை முன்னேற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025