Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை கொலை செய்ய அந்நாட்டின் தலைநகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கிம் ஜோங் உன்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே கிம் ஜோங் உன் படுகொலை செய்ய முயன்றவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு உயர் அதிகாரிகள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
அணு ஆயுதத்திற்கு பெயர் போன வடகொரியாவில் அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன்னை எதிரிகள் நெருங்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் அங்கு தலைநகர் பியோங்யாங்கில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. கிம் ஜோங் உன்னை குறி வைத்து இந்த அசம்பாவிதம் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ds by
வடகொரியாவில் நடந்த கொலை முயற்சி 8 வாரத்திற்கு முன்பு நடந்ததாக தகவல் ஒன்று கூறுகிறது. இருப்பினும் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி தற்போதுதான் இந்த தகவல் கசிந்திருக்கிறது. இதனை வடகொரிய அதிகாரிகள் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடகொரிய தலைவர் மீது நடத்தப்பட்ட முதல் கொலை முயற்சியாக இது கருதப்படுகிறது. இந்த கொலை முயற்சியின் பின்னணியில் தென்கொரியா இருக்கும் என்று வடகொரிய உயர் அதிகாரிகள் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இருப்பினும் உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago