Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 18 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
'குரங்கு அம்மை ' என்பதற்குப் பதிலாக புதிய பெயரொன்றை வைக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக இதுவரை 39 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளதாகவும், உலகளவில் 72 உயிரிழப்புகள் இதனால் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1100 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 29 உயிரியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவொன்று கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது 'குரங்கு அம்மை வைரஸ் பரவல் ஆபிரிக்காவின் தெளிவான தொடர்பு இல்லாமல் கண்டறியப்பட்டுள்ளது.
ஊடகங்களில் ஆபிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களை பயன்படுத்துவது பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது' என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து குரங்கு அம்மை வைரஸின் பெயர்களை மாற்றுவது மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
13 minute ago
23 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
26 minute ago
2 hours ago