Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 06 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரம் அண்மையில் வெளியானது.
அதன்படி, பிரித்தானியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
அதேபோல வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
பிரித்தானியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்ட தரவுகளின்படி, பிரித்தானியா மற்றும் வேல்ஸின் மக்கள் தொகையில் சுமார் 46.2 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இது 59.3 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 46.2 சதவீதமாக குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 4.9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 1.5 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக, மதச்சார்பற்றவர்கள் அங்கு அதிகம் இருக்கின்றனர் என்பதும் சமீபத்திய புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
30 minute ago
32 minute ago