Editorial / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்நியாசினிகள் மீதான பாலியல் குற்றங்களில், பாதிரியார்களும் ஆயர்களும் ஈடுபட்டனர் என, பாப்பரசர் பிரான்ஸிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வத்திக்கானுக்குத் திரும்புவதற்கு முன்னரே, அவர் இதை நேற்று முன்தினம் (05) ஒப்புக்கொண்டார்.
விமானத்தில் வைத்து ஊடகவியலாளரொருவர் கேட்ட போதே, அவர் இதைத் தெரிவித்தார்.
“சில பாதிரியார்களும் சில ஆயர்களும் கூட, அதைச் செய்திருக்கிறார்கள்” என, சந்நியாசினிகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பில் அவர் தெரிவித்தார்.
பாப்பரசர் இவ்வாறு பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளமை, இவ்விடயம் தொடர்பில் பாப்பரசரொருவர் ஏற்றுக்கொண்ட முதலாவது சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
சந்நியாசினிகள் மீதும் சமயப் பெண்கள் மீதும் பாலியல் குற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என, வத்திக்கானின் பெண்களுக்கான சஞ்சிகையொன்றால், கடந்த வாரம் எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்ட பின்னணியிலேயே, பாப்பரசர் இதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதில் சம்பந்தப்பட்ட பாதிரியார்களையும் ஆயர்களையும், கத்தோலிக்கத் திருச்சபை இடைநிறுத்தியுள்ளது எனத் தெரிவித்த பாப்பரசர், இதில் மேலதிகப் பணிகளை ஏற்ற வேண்டுமெனவும் ஏற்றுக்கொண்டார்.
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025