2026 மே 14, வியாழக்கிழமை

சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கும் அவுஸ்திரேலியா

Freelancer   / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற விசா வைத்திருப்பவர்களுக்கு தமது எல்லைகளை மீண்டும் திறப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா அமுல்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக இந்த அறிவிப்பை நாடு விடுத்துள்ளது.

கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்டவர்களை தமது நாட்டிற்கு வரவேற்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 21 முதல்  அவுஸ்திரேலியா  சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவது சர்வதேச கல்வி உட்பட பல துறைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

கொவிட்  தொற்ற காரணமாக அவுஸ்திரேலியா அரசு 2020 மார்ச்  இல் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் வகையில் தமது எல்லைகளை மூடியது. 

எனினும் கடந்த டிசம்பரிலிருந்து சில சர்வதேச நாடுகளின் மாணவர்கள் மற்றும் திறமையான புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .