2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சவுதியில் பிரமாண்ட விண்வெளிக் குடியிருப்பு

Ilango Bharathy   / 2022 மார்ச் 31 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி இளவரசரின் கனவுத் திட்டமான ட்ரோஜெனா (Trojena )எனப்படும் பிரமாண்டமான விண்வெளி குடியிருப்பானது  வரும் 2026ஆம் ஆண்டுக்குள்  கட்டி முடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில் இவ் விண்வெளி குடியிருப்பு அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் இக்குடியிருப்பில் இரண்டு மைல் அகலத்திற்கு நன்னீர் ஏரி அமைக்கப்பட்டுள்ளதாகவும்‘ தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பனிச்சறுக்கு மற்றும் மலை முகடுகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் என்பனவும் ட்ரோஜெனாவில் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X