2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிலிண்டர் வெடித்ததில் நால்வர் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானில், இன்று (13) காலை, பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில்  4 பேர் உயிரிழந்தனர்.

தாய்வான் - தைசங் நகரில், ஷின் கோங் மித்சுகோஷி என்ற பெயரிலான பல்பொருள் அங்காடி ஒன்று 12ஆவது தளத்தில் இயங்கி வருகிறது. இதில், உணவு விற்பனை செய்யும் பகுதியில் திடீரென இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், கட்டிடத்தின் வெளிப்புற பகுதிகள் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 8 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் சீனா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.   

 ஒரு குடும்பத்திலுள்ள 7 பேர் சுற்றுலாவுக்காக வந்த இடத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X