Editorial / 2019 ஜனவரி 22 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சுமார் 3 தசாப்தங்களில், சீனா சந்தித்த மோசமான பொருளாதார வளர்ச்சி, கடந்தாண்டிலேயே ஏற்பட்டது என, உத்தியோகபூர்வத் தரவுகள் நேற்று (21) தெரிவித்தன. மாபெரும் கடன் பிரச்சினை, ஐக்கிய அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் ஆகியன, அந்நாட்டுப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்திருக்கின்றன.
கடந்தாண்டில் சீனா வளர்ந்த 6.6 சதவீதமென்பது, கடந்தாண்டுக்கான அந்நாட்டின் உத்தியோகபூர்வ எதிர்பார்ப்பான 6.5 சதவீதத்தை விட அதிகமானதென்பதோடு, சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்பட்ட அளவிலேயே காணப்பட்டது. ஆனால், 2017இன் பொருளாதார வளர்ச்சி வீதமான 6.8 சதவீதத்தோடு ஒப்பிடும் போது, இது வீழ்ச்சியாகும்.
அதிலும் குறிப்பாக, சீனா சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தெளிவாகக் காட்டுவது போல, கடந்தாண்டின் இறுதி 3 மாதங்களிலும் பொருளாதார வளர்ச்சி, 6.4 சதவீதமாகக் காணப்பட்டது. எனவே, வீழ்ச்சிப் பாதையில் காணப்படும் சீனப் பொருளாதார வளர்ச்சி, மேலும் பாதிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, சர்வதேச சந்தைகளையும் பாதித்திருந்தது. குறிப்பாக, அப்பிள் நிறுவனத்தின் கடந்தாண்டுக்கான வருமான வீழ்ச்சிக்கான பிரதானமான காரணமாக, அந்நிறுவனத்தின் அலைபேசிகளை, சீனாவில் கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளமை குறிப்பிடப்பட்டது.
35 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
9 hours ago
05 Nov 2025