2026 மே 14, வியாழக்கிழமை

dd

சீனாவில் அடுத்த அதிர்ச்சி; சோகத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 09 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் மிகவும் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஒன்று நேற்றைய தினம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், இதன் போது கட்டடங்கள் பல குலுங்கியதால் மக்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிலநடுக்கத்தினை அருகில் உள்ள மாகாணங்களிலும் உணர முடிந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இது வரை தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் நூற்றுக்கணக்கான பேர் மீட்பு பணியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .