Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 25 , பி.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன - பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார அதிகாரசபையை (சிபிஇசிஏ) அதன் மோசமான செயற்றிறன் மற்றும் மோசடி வேலை காரணமாக அரசாங்கம் கலைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை யானையாக மாறியுள்ள சிபிஇசிஏவை கலைக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் திட்டமிடல், அபிவிருத்தி மற்றும் விசேட முயற்சிகள் அமைச்சு, கோரும் என்று அரசாங்க வட்டாரத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக தி நேஷன் தெரிவித்துள்ளது.
அதிகாரசபையின் செயற்றிறன் அதன் ஆரம்பத்தில் இருந்தே மோசமாக இருந்ததாகவும், சிபிஇசிஏ முன்னேற்றத்துக்கு எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை என்றும் அந்த வட்டாரம் கூறியது.
நாட்டில் முதலீட்டை எளிதாக்குவதற்குப் பதிலாக, சிபிஇசிஏ அதிகாரசபை முதலீட்டாளர்களை வெளியேற்றியது என்று அந்த வட்டாரம் கூறுகிறது.
சிபிஇசிஏவில் முன்மொழியப்பட்ட ஆறு பிரிவுகள் உள்ளதுடன், அவை ஒவ்வொரு பிரிவுக்கும் தலைமை தாங்க ஆறு உறுப்பினர்களை நியமிக்க முன்மொழியப்பட்டது.
உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு, ஆற்றல், தொழில், விவசாயம், சமூகம் போன்ற பிரிவுகள், திட்ட ஆணைக்குழுக்களின் பிரதிகளாகும்.
அவர்கள் ஏற்கனவே திட்ட ஆணைக்குழுவில் அதே பிரிவுகளைக் கொண்டிருந்தால், சிபிஇசிஏ வடிவத்தில் மேலதிக சுமையை ஏன் தேசிய கருவூலத்தில் நகலெடுக்க வேண்டும் என, ஆதாரம் கேள்வி எழுப்பியது.
அப்போதைய திட்ட அமைச்சர் ஆசாத் உமர் உட்பட அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்கள் கூட சிபிஇசிஏ ஸ்தாபனத்துக்கு ஆதரவாக இல்லை என்று அமைச்சகத்தின் மற்றொரு செய்தி மூலம் குறிப்பிட்டுள்ளது.
சிபிஇசிஏ கலைக்கப்பட்டதன் பின்னர், தாழ்வாரத் திட்டங்களின் பணிகளை மேற்பார்வையிட திட்டமிடல் அமைச்சின் கீழுள்ள சிபிஇசி செயலகத்தை அரசாங்கம் மீண்டும் செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .