Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 01 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலைமை கைமீறிப் போனதால், சூடானில் சுமார் 10 இலட்சம் பேர் வாந்திபேதியால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக, சுகாதாரத்துறை மந்திரி ஹைதம் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தற்போது சூடானில்,புதிய வகை கொலரா தொற்று பரவல் தலைவிரித்தாடுகிறது. தலைநகர் கார்டூம் மற்றும் ஓம்டுர்மனில் இந்த பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கோர்டோபான், சென்னார், காசிரா உள்ளிட்ட பல மாகாணங்களில் காலரா தொற்று வேகமாக பரவுகிறது.
அதன்படி கடந்த 6 மாதங்களில் சுமார் 7, 700 பேர் கொலரா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். தண்ணீரால் பரவும் இந்த காலரா தொற்று அதிக வயிற்று வலியை ஏற்படுத்தி உயிரையே பறிக்கும் அபாயம் உடையது.
ஏற்கெனவே நிலவும் உள்நாட்டு போருக்கு மத்தியில் கொலரா தொற்றும் வேகமெடுத்ததால் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 172 பேர் கொலரா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago