2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சூடானில் அதிகரிக்கும் மோதல்; 200 பேர் பலி

J.A. George   / 2023 ஏப்ரல் 18 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும், இடையே நடைபெற்று வரும் மோதலில், பொதுமக்கள் 200 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

இதுதவிர 1800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இருதரப்பினர் மோதலில் வைத்தியசாலைகள் சேதமடைந்து இருப்பதாலும், போதிய மருத்துவ உபகரணங்களோ, மருந்துகளோ இல்லாததாலும் சிகிச்சை பெற முடியாமல் நூற்றுக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சூடானில் அமைதியை நிலை நாட்ட அனைவரும் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் குட்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு இராணுவப் பிரிவினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .