Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் கடந்த சில மாதங்களாகக் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.
குறிப்பாக சீனாவின் பொருளாதார மையமாகத் திகழும் ஷாங்காயில் ஏறத்தாழ 2 கோடியே 60 லட்சம் பேர் கடும் கொரோனாத் கட்டுப்பாடுகளால் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வைத்தியசாலைகளில் அதிகரித்துள்ள நோயாளர்களின் எண்ணிக்கை காரணமாக பொதுமக்களின் வீடுகளை சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இதற்காக ஷாங்காய் நகரில் வசிக்கும் மக்களிடம் அவர்களது வீடுகளை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வரும் நிலையில் தற்போது கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் செல்லப்பிராணிகளை கைப்பற்றும் சுகாதார பணியாளர்கள் அவற்றை கொடூரமாக அடித்துக் கொலைசெய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இணையத்தில் வெளியான புகைப்படங்களும், காணொளிகளும் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .